வர்க்கச்க்க்கரம்


30 பாகைகள் கொண்ட இராசிக் கட்டத்தை பல பகுதிகளாக பிரிப்பதன் மூலம் வர்க்க சக்கரங்கள் அமைகின்றன. ஒவ்வொரு வர்க்க சக்கரத்திற்கும் ஒவ்வொரு பயன்பாடு உள்ளது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை – : வர்க்க சக்கரம்

வர்க்கம்

குறியீடு

எதை குறிக்கும்

இராசிD – 1பொதுவான பலன்கள்ஹோராD – 2செல்வம்,  ஆயுள்திரேக்காணம்D – 3உடன் பிறப்புகள்சதுர்த்தாம்சம்D – 4வீடு, நிலம்பஞ்சமாம்சம்D – 5புகழ், செல்வாக்குஸஷ்டாம்சம்D – 6உடல்  நலம்சப்தாம்சம்D – 7குழந்தை பிறப்புஅஷ்டாம்சம்D – 8திடீர் கஷ்டம்நவாம்சம்D – 9திருமணம்தசாம்சம்D – 10வேலை,  தொழில்ருத்ராம்சம்D – 11இறப்பு,  அழிவுதுவாதசாம்சம்D – 12பெற்றோர்ஷோடசாம்சம்D – 16வாகனம்விம்சாம்சம்D – 20ஆன்மீகம்சதுர்விம்சாம்சம்D – 24கல்விநக்ஷத்திராம்சம்D – 27பலம்,  பலவீனம்திரிம்சாம்சம்D – 30கெடுதல்,  தண்டனைகாவேதாம்சம்D – 40சுபம்,  அசுபம்அக்ஷவேதாம்சம்D – 45பாக்கியம்,  மத விஷயங்கள்சஷ்டியாம்சம்D – 60முற்பிறவி  கர்ம வினை

பலன் சொல்லும் வழிமுறை:

உதாரணத்திற்கு ஒரு ஜாதகர் “நான் எப்போது நிலம் வாங்குவேன்” என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம்.

எந்த பலன் பார்க்க வேண்டும் என்றாலும் முதலில் D-1 வர்க்க சக்கரத்தை ஆராய வேண்டும். பிறகு D-9 வர்க்க சக்கரத்தை பார்க்க வேண்டும். இதற்குப்பின், கேள்விக்கு சம்பந்தப்பட்ட வர்க்க சக்கரத்தை ஆராய வேண்டும். ஜாதகர் நிலம் பற்றி கேட்பதால் நாம் பார்க்க வேண்டிய வர்க்க சக்கரம் D-4  ஆகும். ஆகவே D-1, D-9, D-4 ஆகிய வர்க்கங்களை ஆராயாமல் இந்த குறிப்பிட்ட கேள்விக்கு நாம் ஒரு முடிவுக்கு வர இயலாது.

அடுத்து நாம் பார்க்க வேண்டிய பாவங்கள் மற்றும் கிரஹங்கள் எவை என்று காணலாம். கேள்வி நிலம் சம்பந்தப்பட்ட இருப்பதால் 4ம் பாவத்தை நாம் விவரமாக ஆராய வேண்டும். ஒன்பது கிரஹங்களில் நிலம் சம்பந்தப்பட்ட கிரஹம் செவ்வாய் ஆகும். ஆகவே 4 ஆம் பாவத்தையும் செவ்வாய் கிரஹத்தையும் ஆராய்வதன் மூலம் ஜாதகரின் கேள்விக்கு விடை கிடைக்கும்.

மேற்கூறிய வர்க்கங்கள், பாவங்கள் மற்றும் கிரஹங்கள் நல்ல முறையில் அமைந்தால் ஜாதகர் நிலம் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி அமையாத பட்சத்தில் நிலம் வாங்கும் வாய்ப்பு அரிது. நல்ல முறையில் அமைகிறதா இல்லையா என்பதை கண்டறியும் முறையை வருகிற பதிவுகளில் காண்போம்

இதற்கு அடுத்து, ஜாதகர் எப்போது நிலம் வாங்குவார் என்று கண்டறிய வேண்டும்.  நான்காம் வீட்டு அதிபதி, நான்காம் வீட்டில் உள்ள கிரஹங்கள், நான்காம் வீட்டை பார்க்கும் கிரஹங்கள்,  நில காரகர் செவ்வாய் ஆகிய இந்த கிரகங்களின் தசை மற்றும் புக்தி காலங்களிலும் அல்லது கோச்சார காலங்களிலும் ஜாதகர் நிலம் வாங்க வாய்ப்பு அதிகம். நிலத்திற்கு பதிலாக ஜாதகர் வீடு எப்போது வாங்குவேன் என்று கேட்டிருந்தால், செவ்வாய் கிரஹத்திற்கு பதிலாக நாம் கேது கிரஹத்தை ஆராய வேண்டும்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்