பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் பல்லாண்டுகளாகவே நம் தமிழ் கலாச்சாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் சிறப்பை நம் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளதை இங்கு தருகிறேன்.


1. மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். 2.047.7 2. ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப் பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தா னாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே. 4.103.2 3. மத்தமா களியானை யுரிவை போர்த்து வானகத்தார் தானகத்தா ராகிநின்று பித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப் பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு பத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடிப் பயின்றிருக்கு மூரேதோ பணீயீ ரென்ன ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே. 6.45.5 4. வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண் கோவணந் தற்ற யலே ஓதம் மேவிய ஒற்றி யூரையும் உத்திரம் நீர் மகிழ்வீர் மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன் பூண்டி மாநகர் வாய் ஏது காரணம் எது காவல்கொண் டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.7 5. வென்றி விடையார் மதிச் சடையார் வீதி விடங்கப் பெருமாள் தாம் என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு ஒன்றும் செயலும் பங்குனி உத்திரமாம் திருநாள் உயர் சிறப்பும் நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார் 12.1885 6. செறி புன் சடையார் திருவாரூர்ப் திருப் பங்குனி உத்தரத் திருநாள் குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவறுக்க நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர் இறைவர் பாதம் பணிய எழுந்து அருளிச் சென்று அங்கு எய்தினார் 12.3200 7. பங்குனி திரு நாளுக்குப் பண்டுபோல் வருவார் ஆகி         இங்கு எனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே      சங்கிலித் தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர்  கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகிது என்றார்      12.3497

மேலும் அக நானூறு மற்றும் புறநானூறு ஆகியவற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உறந்தை ஆங்கண், வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற் பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள் அகம் 137 ..... ..... மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர் பங்குனி உத்திரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்...... இறையனார் களவியல்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்